மனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் 12 வகுப்பு முடித்த மாணவி – வீட்டிற்கே சென்று உதவிய எஸ்.பி!

Scroll Down To Discover
Spread the love

<hrமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் 12 வகுப்பு முடித்த மாணவி சத்யாவிற்கு நேரில் சென்று பொருளுதவி மற்றும் ஆறுதல் கூறிய புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவர் தந்தை இறந்து விட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வறுமையில் வசித்து பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து, ஏழ்மையின் காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடர முடியாத நிலையில் இருப்பதை கேள்விப்பட்ட, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.எல்.பாலாஜி சரவணன் ,காவல் துணைக் கண்காணிப்பாளர்செந்தில்குமார், நகர காவல் ஆய்வாளர், கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் ,தனிப்பிரிவு ,உதவி ஆய்வாளர் ஆகியோருடன் நேரில் சென்று தேவையான அடிப்படை உதவிகளை செய்தும், ஆறுதல் கூறியும் அந்தப்பெண்ணின் மேற்படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாகவும் மற்றும் மனநலம் பாதித்த சத்யாவின் தாயாருக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்து தருவதாக ஆறுதல் கூறினார்.

இக்கட்டான சூழ்நிலையில் உதவியதற்கும், ஆறுதல் கூறியதற்கும் அப்பெண்ணும், கிராம பொதுமக்களும் காவல்துறையினருக்கு நன்றி கூறினர்.