சென்னை: இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், திருப்பத்தூர், தி.மலை , ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தித்தின் கீழ் பொதுப் பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், ஆயுதப்பிரிவு, பெண் ராணுவ காவல், பார்மா ஆகிய பல்வேறு பிரிவுகளின் அக்னிவீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்

Leave your comments here...