பத்மநாபசுவாமி கோவில் பாதுகாப்பில் குளறுபடி… பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்க கட்டிகள் திருட்டு – வெளியான பகீர் தகவல்

Scroll Down To Discover
Spread the love

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 78 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் திருடுபோனது அம்பலமானது. கோவிலின் பாதுகாப்பிலும் பல குளறுபடிகள் இருப்பதாக கேரள டிஜிபி அறிக்கை அளித்திருக்கிறார்.

பத்மநாபசுவாமி கோவிலில் இருந்த தங்க விளக்கை திருடிவிட்டு அதற்கு பதிலாக வெள்ளி விளக்கை வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவிலின் கருவறையில் இருந்த வைர நாமத்தையும் செப்பனிடுவதற்கு என்று எடுத்து சென்றவர்கள் இன்னும் அதனை ஒப்படைக்கவில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது என கேரள டிஜிபி அறிக்கையில் தகவல் அளித்திருக்கிறார்.

கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் அறிக்கை: கடந்த சில மாதங்களாக கோயிலுக்கு வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 78 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் காணாமல் போய் இருக்கிறது. பராமரிப்புக்காக அகற்றப்பட்ட பல அடுக்கு தங்க விளக்கு, எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது.

சேமிக்கப்பட்டுள்ள அனைத்து தங்கம் மற்றும் வெள்ளி மதிப்புமிக்க பொருட்களும் பாதுகாப்பான அறைக்குள் மாற்ற வேண்டும். கோவில் ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அரச குடும்பத்தின் கூட்டாளிகள் உட்பட சில நபர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் கோவிலுக்குள் நுழைந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மற்றொரு பெரிய கோவிலில் திருட்டு புகார் வந்து இருப்பது பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளது

கோவிலில் இருந்து தங்கம் திருடப்பட்டிருப்பதாக கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் அறிக்கையால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்