இதற்கு பெயர் தூய அரசியலா..? குதிரை பேரத்தை விட மோசமானது – விஜயை விளாசிய அன்புமணி.!

Scroll Down To Discover
Spread the love

பணம், பதவி ஆசை காட்டி ராஜினாமா செய்ய வைப்பது என்ன மாதிரியான செயல்? ராஜினாமா செய்வது குதிரை பேரத்தை விட மோசமானது. குதிரை பேர அரசியலில் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாதது. மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த அதிமுக, தற்போது ஒரே குடையின் கீழ் மீண்டும் வந்துள்ளது. ஆனால் இந்த இணைப்பு நடைபெறுவதற்குள்ளாகவே அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வென்ற 4 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தவெக-வில் இணைந்தனர்.

இந்நிகழ்வுகள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பல கட்சி தலைவர்கள் மற்றும் தவெக-வுடன் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களே கண்டனம் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ள நிக்கலவை ‘ஜனநாயக படுகொலை’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், இப்படி அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்து தங்கள் கட்சியில் சேர்த்து கொள்ளும் தவெக-வின் செயல் மோசடியானது, இன்னும் சொல்ல போனால் இது குதிரைபேரத்தை விட மோசமானது என்று கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். தமிழ்நாடு இதுவரை இதுபோன்ற ஒரு சூழ்நிலையை பார்த்ததே கிடையாது எனவும் கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், சுயநல மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக பதவி விலகி ஆளுங்கட்சியில் இணைவது மக்களின் தீர்ப்பை முற்றிலும் அவமதிக்கும் செயலாகும். மாற்று அரசியல் மற்றும் தூய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறி ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் விஜய், இதுபோன்ற அரசியல் கட்சி தாவல்களை அனுமதித்ததன் மூலம் அவர் பேசிய “தூய அரசியல்” முடிவுக்கு வந்துவிட்டது.

முதல்வர் விஜய் நேர்மையான அரசியலை விரும்புபவராக இருந்தால், த.வெ.க-வில் இணைந்த அந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கும் வரும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது. தேர்தல் முடிந்து மக்களின் விரலில் வைக்கப்பட்ட மை கூட இன்னும் முழுமையாக அழியாத நிலையில், சுயநலத்திற்காக ராஜினாமா செய்துள்ள 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் ஒருவேளை இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவர்கள் அதில் படுதோல்வி அடைவார்கள்.

இவர்களின் சுயலாபத்திற்காக தேவையின்றி இடைத்தேர்தல் வருகிறது, இதெல்லாம் நல்லதற்கல்ல.. ஆளுங்கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு “பொது வேட்பாளரை” நிறுத்த கூட செய்வோம், அந்த நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் என்றும் எச்சரித்து உள்ளார்