உல​கிலேயே மிக உயர​மான ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர் – ஹைத​ரா​பாத்​தில் அமைகிறது..!

Scroll Down To Discover
Spread the love

உல​கிலேயே மிக உயர​மான ஹரே கிருஷ்ணா பாரம்​பரிய டவர் ஹைத​ரா​பாத்​தில் 430 அடி உயரத்​தில் அமைய உள்​ளது.

ஹைத​ரா​பாத் : கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நார்​சிங்கி என்ற இடத்​தில் ஹரே கிருஷ்ணா  அறக்கட்டளையினர் 430 அடி உயரத்​தில் ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர் கட்ட அடிக்​கல்  நாட்​டினர். ஹரே கிருஷ்ணா எனும் தாரக மந்​திரத்தை உலகெங்​கிலும் கொண்டு செல்ல பாடுபட்ட ஏ.சி.பக்​தி வே​தாந்த சுவாமி பிரபு​ பா​தாவுக்கு இதனை அறக்​கட்​டளை​யினர் சமர்ப்​பணம் செய்ய     உள்​ளனர்.

இத்​தாலி​யின் புகழ்​பெற்ற பைசா கோபுரம் 187 அடி, டெல்லி குதுப் மினார் 240 அடி, நியூ​யார்க் சுதந்​திர தேவி சிலை 305 அடி உயரம் கொண்​ட​வை. இவற்றை விட ஹைத​ரா​பாத்​தில் அமைய​வுள்ள இந்த ஆன்​மிக பாரம்​பரிய டவர் 430 அடி கொண்​டது.

இங்கு ஸ்ரீ ராதா சமேத கிருஷ்ணர், சீதா சமேத ஸ்ரீ ராமர், லட்​சுமணர், அனுமன், வெங்​கடேச பெரு​மாள் மற்​றும் நிதாய் கவுரங்கா ஆகியோ​ருக்​கான கோயில் மிக பிரம்​மாண்​ட​மாக கட்​டப்பட உள்ளன.

இக்​கோ​யில் கோபுர உச்​சி​யில் சுதர்சன சக்​கரம் அமைக்​கப்பட உள்​ளது. புரி ஜெகன்​நாதர் கோயி​லில் இருப்​பது போல் இது அமைக்​கப்பட உள்​ளது. 6 ஏக்​கர் பரப்​பள​வில் கட்​டப்​படும் இந்த பாரம்​பரிய டவரில் ஆசிரமங்​கள், மல்டி விஷன் தியேட்​டர், நூலகம், பகவத் கீதை அரங்​கு, பூங்​கா, பாரம்​பரிய கல்வி நிலையம் உள்​ளிட்​ட​வை அமைக்​கப்​பட உள்​ளன.