ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி.. ராஜேந்திர பாலாஜியிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!

Scroll Down To Discover
Spread the love

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்’ என்று ராஜேந்திர பாலாஜி கோரி இருந்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. மேலும் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதே போன்று அவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் ஏற்கனவே ஐகோர்ட்டில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் இனிமேல் அவர் மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்று வெளிநாடு செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.