அதி நவீன வடிவமான ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்க இந்தியாவும், ரஷ்யாவும் முடிவு.!

Scroll Down To Discover
Spread the love

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், எஸ்.சி. ஓ., நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு, நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, ராணுவ அமைச்சர், ராஜ்நாத்சிங் தலைமையிலான குழு, ரஷ்யாவுக்கு சென்றுள்ளது.

ராஜ்நாத்சிங், ரஷ்ய ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் சோயிகுவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு பற்றி ராஜ்நாத் சிங் தன் ட்விட்டரில், ரஷ்ய ராணுவ அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருந்தது. ராணுவ ஒத்துழைப்பு, ராணுவ பலப்படுத்தம் உள்ளிட்ட விஷயங்களை விவாதித்தோம்.

மேலும் இந்தச் சந்திப்பில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளின் அதி நவீன வடிவமான ஏகே 47-203 ரகத் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேச்சு வார்த்தையை இந்தியாவும் ரஷ்யாவும் இறுதி செய்துள்ளன.இந்திய ராணுவத்துக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் துப்பாக்கிகள் தேவைப்படுகின்றன. இவற்றில் ஒரு லட்சம் துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்படும். மீதித் துப்பாக்கிகளை உத்தரப் பிரதேசத்தில் உள்ள கொர்வா தொழிற்சாலையில் இந்தியா-ரஷ்யா கூட்டாகச் சேர்ந்து தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.