கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

Scroll Down To Discover
Spread the love

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போல், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கும், உத்தர பிரதேச மாநில, பா.ஜ., தலைவர் ஸ்வதேந்திர சிங்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவால் பாதி்க்கப்பட்டார்.
இது குறித்த அவரது டிவிட்டர் பதிவு:-


நான் கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று உறுதியானது. எனவே நான் டாக்டர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் உள்ளேன். ஆகவே, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்யவதுடன். 14 நாள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்.