கரூரில் ஒரு பிரச்சினை நடந்தது. 72 நாட்கள் விஜய் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஒரு பிரச்சினை நடந்தவுடன் 15 நாள் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டார். அப்புறம் எப்படி கட்சி நடத்தி மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார். ஒரு பிரச்சினையை சந்திக்கும் திறன்கூட அவருக்கு இல்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவை தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என எங்களையும், பாஜகவையும் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலின்போது உரிமைத் தொகை நிறுத்தப்படவில்லை. அப்படி இருக்கையில் எப்படி வரும் தேர்தலில் நிறுத்த முடியும். ஒரு திட்டம் செயல்பாட்டில் இருக்கும்போது, அதனை தேர்தல் நேரத்தில் நிறுத்த முடியாது என்பதை நாடே அறியும்.
2026 தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான் இந்த ரூ.5000 அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் மூன்று மாதங்களுக்கான தொகையை முன்பணமாக கொடுத்துள்ளார். மேலும், கோடை காலத்துக்காக ரூ.2000 சிறப்புத் தொகையும் கொடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வருகிறது, அப்படியானால் 2026-ல் தேர்தல் வரும்போது மட்டும்தான் ஸ்டாலினுக்கு கோடை காலம் தெரிகிறதா?
திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது, அதனால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் படும் கஷ்டங்களை பார்த்து உரிமைத் தொகையை கொடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று அஞ்சித்தான் இந்த பணத்தை கொடுக்கின்றார், வாக்குகளைப் பெறுவதற்காக
வரும் 3 மாதம் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றால் மகளிர் கஷ்டப்படுவார்கள் என ஸ்டாலின் சொல்லியுள்ளார். 2021 தேர்தலின்போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சியமைத்து 27 மாதம் கழித்துதான் உரிமைத் தொகையை வழங்கினார். நாங்கள் தொடர்ந்து சட்டப்பேரவையில் அழுத்தம் கொடுத்ததால் தான் அப்போதும் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. 27 மாதம் தாமதமாக உரிமைத் தொகை பெற்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்களா?
20 லட்சம் பெண்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கு 55 மாதங்களாக அந்தத் தொகை வழங்கப்படவில்லை. அவர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்களா?
ஜெயலலிதா கொண்டுவந்த மடிக்கணினி திட்டத்தை முடக்கிவிட்டு, தேர்தலுக்கு முன்னதாக திமுக அரசு கொடுக்கிறது. உரிய நேரத்தில் மடிக்கணினி வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகம் வரும் அமித் ஷாவை சந்திப்பது குறித்து முடிவும் இல்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரவுள்ளன. தவெகவின் வருகை யாரை பாதிக்கும் எனத் தெரியவில்லை. விஜய் இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. அவர்கள் தேர்தலை சந்தித்தால்தான் என்ன செல்வாக்கு உள்ளது எனத் தெரியும். தமிழக மக்கள் விழிப்புணர்வு கொண்டவர்கள்.
விஜய்க்கு என்ன தெரியும்? கரூரில் ஒரு பிரச்சினை நடந்தது, 72 நாட்கள் அவர் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஏன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கேட்பதாக விஜய் சொல்கிறார். தலைவர் என்றால் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீங்கள் எவ்வளவு கேள்வி கேட்கிறீர்கள்.
ஒரு கட்சியை நடத்தினால், நிருபர்கள், மக்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியது தலைவரின் கடமை. அதனை அவர் செய்துள்ளாரா? பிரச்சினை நடந்தவுடன் 15 நாட்கள் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டார். அப்புறம் எப்படி கட்சி நடத்தி மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார். ஒரு பிரச்சினையை சந்திக்கும் திறன்கூட அவருக்கு இல்லை. இது ஜனநாயக நாடு. யாரும் கட்சி தொடங்கலாம். மக்கள் அங்கிகரித்தால் வெற்றி பெறலாம்” என்றார்
அதிமுக ஐ.டி. விங் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Leave your comments here...