சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் நகைகள் திருட்டு – தலைமை பூசாரி கைது..!

Scroll Down To Discover
Spread the love

சிங்கப்பூரின் பழமையான இந்து கோவிலான ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் தலைமை பூசாரியின் பொறுப்பில் இருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போனதை அடுத்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவில் பூசைகளுக்குப் அடிக்கடி பயன்படுத்தப்படும் அந்த தங்க ஆபரணங்கள் கோயிலின் உள் கருவறையில் தலைமை பூசாரி பொறுப்பில் வைக்கப்படுகின்றன. அந்த தங்க ஆபரணங்களை உறுதி செய்வதற்காக வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.நகைகள் குறித்த ஆய்வு பணி நடந்த போது, சிலை காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, தலைமை பூசாரி விசாரிக்கப்பட்டதாகவும், அப்போது, காணாமல் போன் நகை அவரிடம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நகை பறிமுதல் செய்யப்பட்டது. வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை.

மேலும், இந்த சம்பவத்தில் வேறு எந்த நபரும் ஈடுபடவில்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதில் நம்பிக்கையை மீறியதற்காக 36 வயதான அவர் கைது செய்யப்பட்டார். தற்போது தலைமை பூசாரி ஜாமீனில் உள்ளார் என்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.