மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Scroll Down To Discover
Spread the love

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது.

சாமானியர்கள் முதல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் வரை பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


இதனை தனது டுவிட்டரில் அமித்ஷா பதிவிட்டுள்ளார்:- கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்ய முடித்தேன். மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது. நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட நீங்கள் அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் என கேட்டுக்கொண்டுள்ளார்.