பயங்கரவாதத்திற்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்க 44 சிறப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம்..!

Scroll Down To Discover
Spread the love

பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்திற்கு உதவி செய்வோரின் சொத்துக்களை முடக்குவதற்கான அதிகாரம் அரசு மூத்த அதிகாரிகள் 44 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் அல்லது பயங்கரவாதத்திற்கு உதவி செய்வோருக்கு சொந்தமான நிதி சொத்துக்கள் ஆகியவற்றை முடக்கும் அதிகாரம் அரசு அதிகாரிகள் 44 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 51ஏ சட்டப் பிரிவை அமல்படுத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


இந்த அதிகாரிகள் மத்திய மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்கள் ரிசர்வ் வங்கி பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நிதி புலனாய்வு அமைப்பு ஆகியவற்றை சேர்ந்தவர்கள்.இவர்கள் போலீஸ் சி.பி.ஐ. அமலாக்கத் துறை உட்பட சட்டத்தை காக்கும் அமைப்பினருக்கு பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்க உதவி செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.