கம்யுனிஸ்ட் கோட்டையில் சீன கம்யுனிஸ்ட் தலைவரின் உருவபொம்மையை எரித்த இந்துமகாசபா தலைவர்..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், ( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என அறைகூவல் விடுக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது.சீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிவு செய்துள்ளன. மேலும், உ.பி மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டுமெனவும், அதற்கேற்ப இந்திய நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டுமெனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதனை கண்டித்து கேரளாவில் சீன அதிபர் ஜிங்பிங் கின் உருவபொம்மையை நடுரோட்டில் கடகடவென தரையில் இழுத்து கேரள கம்யுனிஸ்ட் அரசின் முதல்வர் பினராயிவிஜயன் இருக்கும் கேரளாவின் சட்டசபை முன்பு கொண்டு வந்து தீயிட்டு கொழுத்தினார் இந்துமகாசபா கேரள மாநிலத்தின் தலைவர் சுவாமி.சாய்சொரூபநாத். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.