200 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் பூமிக்குள் புதைந்த இருந்ததை கண்டுபிடிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே மணல் தோண்டும் பணியின் போது பூமிக்குள் புதையுண்டு கிடந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பென்னா ஆற்றங்கரையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் எடுக்கும் பணி நடந்துவருகிறது. அங்கு மணல் எடுக்கும் போது பூமிக்குள் ஏதோ மிகப் பெரிய கட்டடம் தென்படுவதை தொழிலாளர்கள் கண்டனர்.இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கும் மணல் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. மணல் அள்ளிய போது கோபுரம் ஒன்று தென்பட்டது.


இதனால் பணி நிறுத்தப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கோவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.இக்கோவிலை மீண்டும் புணரமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிலின் சிவபெருமானின் சிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.