வைகாசி மாத பூஜைக்காக இன்று சபரிமலை கோயில் நடை திறப்பு…!

Scroll Down To Discover
Spread the love

கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக இன்று கோயில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுகிறார்; வேறு பூஜைகள் இல்லை. இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை, 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் நடைபெறும். கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை நடத்தப்பட்டு, 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடை திறக்கப்பட்டு காலை, மாலை ஆகிய இருவேளையில் பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு காரணமாக பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அதே நேரத்தில் www.onlinetdb.com ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.