தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை மரியாதை செய்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Scroll Down To Discover
Spread the love

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சி, தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து அவர்களைக் கௌரவப்படுத்துவது போன்ற நெகிழ்ச்சி சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன.கொரோனா தொற்று எல்லோருக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தூய்மைப்பணியாளர்கள் மேற்கொண்டுவரும் சேவை மகத்தானது என்று மக்கள் உணர்கிறார்கள் என்பதையே இந்த நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பத்மநாபபுரம் நகராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு, பிளீச்சிங், சுண்ணாம்பு பவுடர் போடுதல், வடிகால் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நேற்று, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பத்மநாபபுரம் நகராட்சி, தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து அவர்களின் பணியை பாராட்டினார்.

பின்னர் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாவட்ட துணதலைவர் குமரி பா.ரமேஷ் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.!

மேலும் அருமனை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்