சமூக இடைவெளி எங்கே…? மும்பையில் நடந்த கூத்து இது…!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் இன்று காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. 775 பேர் பலியாகி உள்ளனர். 5,063 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 18,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,425 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றின் சங்கிலி தொடர்பை அழிக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் பெரும்பாலான இடத்தில் மக்கள் பொது இடங்களில் நூற்றுக்கணக்கில் கூடி ஊரடங்கை வீணடிக்கச் செய்து வருகின்றனர். கொரோனா குறித்த அச்சமும் போதிய விழிப்புணர்வும் இல்லாமல் பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.மும்பையில் உள்ள பிரபல மார்க்கெட்டான, பைகுல்லா காய்கறி மார்க்கெட்டில் இன்று காய்கறி வாங்க வந்த மக்களில் பெரும்பாலானோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.மார்க்கெட்டுக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.


இந்த வரிசையிலும் சமூக இடைவெளி இன்றி மக்கள் நெருக்கமாக நிற்பதை காண முடிகிறது. இதேபோல் தலைநகர் டெல்லியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய பழ-காய்கறி சந்தையான ஆசாத்பூர் சப்ஜி மண்டி 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அங்கும் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி உள்ளது.