காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

Scroll Down To Discover
Spread the love

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு மனித குலம் கடுமையாக போராடி வரும் நிலையில், இந்த சூழ்நிலையை பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு நாசவேலையில் ஈடுபடுகின்றன

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.


இதில் 2 பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர் ஒருவரை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர். தொடர்ந்து, அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.