தமிழகத்தில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வு இல்லை.

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் தளர்வுகள் எதுவுமில்லை, ஊரடங்கு வழக்கம்போல மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதலில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. எனினும், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கை தளா்த்துவதற்கான சில விதிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், விவசாயம் சாா்ந்த பணிகள், நெடுஞ்சாலை உணவகங்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்களுக்கு தளா்வு அளித்து இயங்க அனுமதிக்கலாம் எனத் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து மாநில அரசுகள் முடிவு செய்யவும் அறிவுறுத்தியிருந்தது.


இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து திங்கட்கிழமை அறிவிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கென, தமிழக அரசு சாா்பில் அமைக்கப்பட்ட நிபுணா் குழு தங்களது அறிக்கையை இன்று முதல்வரிடம் சமர்பித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.