தினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி காலமானார்: முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

Scroll Down To Discover
Spread the love

தினமலர் பங்குதாரர் காலம்சென்ற ஆர்.ராகவன் அவர்களின் மனைவியும், திருச்சி தினமலர் ஆசிரியர் பாலாஜியின் தாயாருமான சுப்புலட்சுமி நேற்று (பிப்பிரவரி 27) மாலை 4.30 மணிக்கு திருச்சியில் காலமானார். இவருக்கு வயது (77).நாகர்கோவிலில் சுப்பிரமணி அய்யர், வேங்கடலட்சுமி தம்பதிக்கு 1943 ல் மகளாக பிறந்தவர், சுப்புலட்சுமி. அவருக்கு 4 சகோதரர்கள், 3 சகோதரிகள். தினமலர் பங்குதாரர் ஆர். ராகவனை 1964ல் மணந்தார். அவர்களுக்கு 2 மகன்கள். திருச்சியில் வசித்துவந்த அவர், நேற்று மாலை இயற்கை எய்தினார்.

அவரது இறுதிச்சடங்குகள், இன்று (28ம் தேதி) மதியம் 3 மணிக்கு திருச்சி கன்டோன்மென்ட், பேர்ட்ஸ் ரோடு இல்லத்தில் நடைபெறும். இறுதி ஊர்வலம் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.இன்று மறைந்த அம்மையாரின் உடலுக்கு உறவினர்கள், மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.