சர்ச்சிக்கு வந்த 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : பாதிரியார் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது – சிறையில் அடைப்பு..!!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக வடக்கன்குளத்தில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மாரநாதா தேவாலயத்தில் பாதிரியாராக செயலாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெபக்கூடத்திற்கு அதேபகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வழக்கமாக ஜெபம் செய்ய வருவார்கள். அந்த தம்பதியினரின் 8 வயது பெண் குழந்தையும் தினமும் அங்கு வந்து செல்லும்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு பாதிரியார் செல்வராஜ் கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதேபோல் கடந்த 23-ந்தேதியும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் செல்வராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து பாளையம்கோட்டை சிறையில் அடைத்தனர்