கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசளிப்பதாக நடிகர் ஜாக்கி ஜான் அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரசிற்கு இதுவரை 908 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலக அளவில் 37 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. கொரோனா பரவாமல் இருக்க சீனா உட்பட பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் நோயை தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. இதற்காக அவசர அவசரமாக 1000 படுக்கையறைகளுடன் இரண்டு தற்காலிக மருத்துவமனைகளையும் உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி ஜான் இது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்:- இந்த கொரோனா வைரசால் பல உயிர்கள் தினமும் பலியாகிறது. இ்நத கொரோனா வைரசினை தடுக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மிக முக்கியம். அதனால் வைரசினை கட்டுப்படுத்த விரைவில் புதிய மருத்துகளை கண்டுபடிக்கமுடியும் என நம்புகிறேன். எனனுடைய தோழர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சீன மருத்துவர்களும் கொரோனாவுக்கு எதிராக பல செயல்படுகளையும் நடத்தியும் உயிர்பலி நின்றபாடில்லை.

ஒரு தனி நபரோ அல்லது குழுவாகவோ சேர்ந்து கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்து கொடுத்தால் அவர்களுக்கு 1 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 1,02,21,520.00 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்படும். இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காகத்தான் என்று கூறியுள்ளார்.