குமரியில் அரசுப் பேருந்தில் போலீஸார் நடத்திய சோதனையில் பயணியிடம் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல்..!!

Scroll Down To Discover
Spread the love

கடந்த மாதம் ஜனவரி 8ஆம் தேதி களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலையில் ஈடுபட்டது தவுபீக், ஷமீம் என்ற இருவரை கைது செய்தனர். தற்போது இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில் களியக்காவிளை அருகே கேரளப் பகுதியான அமரவிளை சோதனைச் சாவடியில், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற தமிழக அரசுப் பேருந்தில் கேரள மதுவிலக்குப் பிரிவு போலீஸார் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் பயணி ஒருவர் பையில் மறைத்து எடுத்துச் சென்ற துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


இதுதொடர்பாக தென்காசி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்த பாறசாலை போலீஸார், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர், துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.