சிவலிங்கம் குறித்து அவதூறாக பேசிவிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சீமான் தரிசனமா…? கொந்தளிக்கும் அர்ஜூன் சம்பத்

Scroll Down To Discover
Spread the love

தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைவர் செபஸ்டியன் சைமன் அவர்களுக்கும், அவருடன் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி உமாயூன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு விழாவில் மரியாதை செய்திருப்பது உலகெங்கிலுமுள்ள சிவ பக்தர்களின் மனதை புண்படுத்தி உள்ளது. சீமான் அவர்கள் சிவலிங்கம் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். அவருடன் வந்த ஹுமாயூன் மாட்டுக்கறி சாப்பிடுவதை பெருமையாக பேசுபவர்.

https://youtu.be/TS6K4rahaw8


இவர்களோடு வந்த பலரும் மது அருந்தி இருந்ததோடு செருப்பு காலுடன் வருகை தந்துள்ளனர். இந்து சமயக் கோயில்களில் பிற மதத்தைச் சார்ந்தவர்கள் தரிசனம் செய்ய முடியாது. சீமான் தாய் மதம் திரும்பியவர் அல்ல உமாயூன் இந்து சமயத்தை ஏற்றுக் கொள்பவர் அல்ல. இப்படிப்பட்ட சூழலில் சிவபெருமானை ராஜராஜ சோழனை அவமதித்து பேசியும் எழுதியும் வருகின்ற சீமானுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் கோயிலில் மரியாதை செய்தது கண்டிக்கத்தக்கது.

இந்து அறநிலையத்துறை சட்டத்திற்கு விரோதமானது மேற்படி நிகழ்ச்சியின்போது சீமானுக்கு மரியாதை செய்த அறநிலையத்துறை அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்த அர்ச்சகர்கள் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இது சம்பந்தமாக சீமான் மீதும் அவரோடு சேர்ந்து கோயிலில் வந்து அடாவடித்தனம் செய்த நாம் தமிழர் கட்சியினர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.