கோவாவில் புதுப்பிக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளம் தொடக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

பழைய கோவாவில், புதுப்பிக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தை, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக், கோவா துணை முதல்வர் மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி:- தேசிய சுற்றுலா மையமாக மட்டும் கோவா புகழ்பெறவில்லை, சர்வதேச சுற்றுலா தலமாக புகழ்பெற்றுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினருடன் தனது அனுபவத்தை குறிப்பிட்ட, மத்திய அமைச்சர், பயிற்சிக்கு வந்த இஸ்ரேல் ராணுவத்தினருக்கு இந்தியாவில் மிகவும் பிடித்த இடம் கோவா என குறிப்பிட்டார்.

சுதேசி தர்ஷன் கடலோர சுற்று திட்டத்தின் கீழ் இந்த ஹெலிகாப்டர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் திட்டம். இத்திட்டம், நாட்டில் கருத்து அடிப்படையிலான சுற்றுலா சுற்றுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.