ஜூலை மாதம் மாதத்தில் மட்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், 14.65 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு.!

Scroll Down To Discover
Spread the love

இபிஎப்ஓ அமைப்பில், 14.65 லட்சம் சந்தாதாரர்கள் ஜூலை மாதம் இணைந்தனர். நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின், தற்காலிக தரவு விவரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ), 2021 செப்டம்பர் 20 அன்று வெளியிட்டது.

இதில் கடந்த ஜூலை மாதம், 14.65 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஜூனுடன் (11.16 லட்சம்) ஒப்பிடும் போது இது 31.28 சதவீதம் அதிகம் ஆகும்.

ஜூலை மாதம் இணைந்த சந்தாதாரர்களான 14.65 லட்சம் பேரில், 9.02 லட்சம் பேர், இபிஎப்-ன் சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள். அதே மாதத்தில் 5.63 லட்சம் சந்தாதாரர்கள் பணிமாற்றம் காரணமாக வெளியேறி, இபிஎப்ஓ அமைப்பில் மீண்டும் இணைந்துள்ளனர்.

பெரும்பாலான சந்தாதாரர்கள், இபிஎப்ஓ அமைப்பில் தொடர்ந்து இருக்க விரும்புவதை இது காட்டுகிறது. இவர்களின் பழைய பி.எப் கணக்கு நிதிகள், புதிய நிறுவனத்தின் பி.எப் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளன.

மேலும், ஜூலை மாதத்தில் இபிஎப்ஓவில் புதிதாக இணைந்துள்ளவர்களின் விகிதம் 6 சதவீதமும், மீண்டும் இணைபவர்களின் எண்ணிக்கை 9 சதவீதமும் அதிகரித்துள்ளது தரவுகளில் தெரிய வந்துள்ளது.வெளியேறிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது 36.84 சதவீதம் குறைந்துள்ளது.