கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் : திடீரென செத்த 300 கோழிகள்..!

Scroll Down To Discover
Spread the love

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம், கூராசுண்டு பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன் இந்த பண்ணையில் இருந்த 300க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென செத்தன. இதுகுறித்து அறிந்ததும் கால்நடை பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருவனந்தபுரம் மற்றும் ஆலப்பழாவில் உள்ள பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் ஒரு பரிசோதனை கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கோழிகள் இறந்ததற்கு பறவை காய்ச்சல் தான் காரணம் என தெரிய வந்துள்ளது.மற்றொரு பரிசோதனை கூடத்த்தில் நடத்தப்பட சோதனை பறவை காய்ச்சல் இல்லை என தெரியவந்தது.

இதையடு்தது கூடுதல் பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள பரிசோதன கூடத்திற்கு அனுப்ப  வைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு இன்று அல்லது நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கோழிகள் இறந்த பண்ணையில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில், அனைத்து கோழிப்பண்ணைகளையும் மூட கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பறவை காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே கொரோனா, ஜிகா என அச்சத்தில் வாழும் கேரள மக்களுக்கு அடுத்து பறவை காய்ச்சல் பரவல் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.