இந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவு..?

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பிரதமர் மோடி மற்றும் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பாதிரியார் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். பின்னர் விருதுநகர் அருகே உள்ள கள்ளிக்குடியில் அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நாகர்கோயில், அருமனை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.

இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.