டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்குவோர் மீது வழக்கு பதிவு- மத்திய அரசு அதிரடி உத்தரவு

Scroll Down To Discover
Spread the love

கொரோனா சிகிச்சை தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா நேற்று அனுப்பிய கடிதம்:- டாக்டர் உட்பட சுகாதார பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல், தாக்குதல் போன்றவை, அவர்களது மன உறுதியைக் குறைத்து, பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கக்கூடும்.

எனவே தாக்குதலில் ஈடுபடுவோர் மீது, 2020ம் ஆண்டு திருத்தப்பட்ட தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தில், டாக்டர் உட்பட சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு, ஐந்து அல்லது ஏழு ஆண்டு சிறை மற்றும் 2 அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை உள்ளது.