காஷ்மீர் அனைத்து கட்சி தலைவர்களுடன், பிரதமர் மோடி 24-ந் தேதி ஆலோசனை.!

Scroll Down To Discover
Spread the love

கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு – காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும், சட்டசபை தேர்தல் நடத்தப்படும்’ என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தற்போது ஜம்மு – காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதைத் தொடர்ந்து, மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்தும், சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்தும், மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 24ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்க உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில் கலந்து கொள்வது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகமூபா முப்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 24-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.