பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்படும்.

மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. கடும் மழை, கொளுத்தும் வெயில், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து ஊடகத் துறையினர் உழைக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.