‘இஸ்ரோ ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி, நம்பி நாராயணன் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையை பதிவு.!

Scroll Down To Discover
Spread the love

இஸ்ரோவின் முக்கியமான ராக்கெட் தொழில்நுட்பத்தை, வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக, 1994ல், கேரளாவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, இஸ்ரோ விஞ்ஞானி, நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. ‘நம்பி நாராயணன் குற்றமற்றவர்’ என, நீதிமன்றத்தில் தெரிவித்தது. அவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தவறு செய்த போலீஸ் அதிகாரிகளை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்யவும், குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அதன் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்தது.

இதையடுத்து, அந்த அறிக்கையில் குறிப்பிட்ட, போலீஸ் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.அதன்படி, கேரள போலீஸ் உயரதிகாரிகள் மீது, சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதனால், ஓய்வு பெற்று விட்ட அந்த போலீஸ் உயரதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.