பாஸ்ட்ராக் முறை அமல்படுத்திய பிறகும் சுங்கச்சாவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.!

Scroll Down To Discover
Spread the love

தென்மாவட்டங்களில் நினைக்கக்கூடிய பிரதான சாலையான மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி தற்பொழுது பாஸ்ட்ராக் முறை கட்டாயம் என்ற போதிலும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் வரையில் அணிவகுப்பு நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் கூறுகையில்:- பணம் செலுத்தி செல்லும் பொழுதும் இதே நேரம் தான் ஆனது எனவும் தற்பொழுது பாஸ்ட்ராக் முறைகளையும் சுமார் பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வரை காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது என , வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் எங்களுக்கு எரிபொருள் செலவும் அதிகரிப்பதாகும் தற்போது டீசல் விற்கும் விலையில் 15 நிமிடம் நின்றால் என்ன ஆவது என வாடகை கார் ஓட்டுநர் நம்மிடம் தெரிவித்தார் ஃபாஸ்ட்ராக் முறையில் மூன்று நிமிடத்துக்கு மேல் கால தாமதம் ஆனால் பணம் செலுத்தத் தேவையில்லை பாஸ் டிராக்கில் பணம் கழித்து கொள்ளாது என,, மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதையும் மீறி திருமங்கலம் சுங்கச் சாவடியில் சுமார் பதினைந்தில் இருந்து இருபது நிமிடம் வரை காத்திருக்க வைத்து பணத்தையும் பறித்துக் கொள்கிறார்கள் இந்த அவல நிலையை போக்க, போக்குவரத்து நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தி: Ravi Chandran