வாரணாசியிலிருந்து கத்தாருக்கு முதன்முறையாக அரிசி ஏற்றுமதி.!

Scroll Down To Discover
Spread the love

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரிசி விளைச்சல் பெருமளவு இருப்பதைக் கருத்தில் கொண்டும், அரிசி ஏற்றுமதிக்கு வாரணாசியில் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (APEDA), முன்னணி ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான சரக்கு தளத்தை ஏற்பாடு செய்திருந்தது.

2020 டிசம்பர் 16 அன்று வாரணாசியிலிருந்து முதன் முறையாக 520 மெட்ரிக் டன் அரிசியை கத்தாருக்கு ஏற்றிச்சென்ற வாகனத்தை அபெடா அமைப்பின் தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து, வாரணாசி மண்டல ஆணையர் தீபக் அக்ரவால் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். எம். அங்கமுத்து, வாரணாசியிலிருந்து அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்ட அறிக்கையை அபெடா தயாரிக்கும் என்று குறிப்பிட்டார்.