திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலுக்கு, சிறப்பு பேருந்துகள் – புரட்டாசி நான்காம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு.!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலுக்கு, புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக, சிவகாசி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளிலிருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீனிவாசப்பெருமாளை ஏராளமான பகதர்கள் தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து, கூட்ட நெரிசலில் சிக்காமல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வழக்கமாக புரட்டாசி மாதத்தின் ஐந்து சனிக்கிழமைகளிலும் திருவண்ணாமலை கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அடுத்த சனிக்கிழமையன்று ஐப்பசி மாதம் துவங்குவதால், பெரும்பாலான பக்தர்கள் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை கோவலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.