வம்பன் வேளாண் அறிவியல் மையத்தில் மூலிகை பயிர் வளர்ப்பு குறித்தஒருநாள் பயிற்சி முகாம்

Scroll Down To Discover
Spread the love

புதுக்கோட்டை: வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் மூலிகை வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞா.பிரபு குமார் தலைமை தாங்கி மூலிகை பயிர்களின் பயன்கள் அதன் அவசியம் குறித்து பேசினார்.

மூலிகை தாவர பயிர்கள் உற்பத்தியாளர் பவானந்தம் கலந்து கொண்டு மூலிகை மருத்துவத்தின் பயன்கள் மூலிகைச் செடிகள் வளர்ப்பு முறை மூலிகை மருத்துவத்தால் குணமாகும் நோய்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பா.வினோதா கலந்துகொண்டு மூலிகை வளர்க்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

இதற்கு இரண்டு ஏக்டர் நிலம் தேவைப்படும்.மாவட்டம் முழுவதும் இதற்கான விண்ணப்பங்கள் செய்ய விரும்புவர்கள் அந்தந்த பகுதி தோட்டக்கலை துறை உதவி இயக்குனரிடம் கேட்டு பெற கேட்டுக்கொண்டார். பயிற்சி ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியர் முனைவர் தனலட்சுமி மற்றும் ஜேக்கப் பிரியா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பூர்ணகலா நன்றி கூறினார்.25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.