ஆப்கானிஸ்தானில் தாலிபானின் பயங்கரவாதம் அதிகரிப்பு : நாட்டை விட்டு வெளியேறும் சிறுபான்மையினரான இந்துக்கள்..?

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவின் நட்பு நாடான ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர்.

இதற்காக தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு பிற நாடுகளுக்கு குடியேறலாம் அல்லது மீண்டும் இந்தியாவுக்கே திரும்பலாம் என அவர்கள் நினைக்கின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் அங்கு வாழ்ந்த சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து காணப்படுகின்றன. இதனை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

இது தற்போது ஆப்கான் அரசுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதியை தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆக்கிரமித்துக்கொண்டு ஆப்கன் அரசுடன் அடிக்கடி போர் செய்துவருகிறது. இதனால் அங்கு குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலில் 25 சீக்கியர்கள் தலிபான்களால் கொல்லப்பட்டனர். ஆப்கன் அரசின் ஒத்துழைப்பு ஒருபக்கம் இருந்தாலும் தொடர்ந்து தாங்கள் சில இஸ்லாமிய மத வெறியர்களால் ஒடுக்கப்படுவதாக சீக்கியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
https://twitter.com/timesofindia/status/1310361076291174400?s=20
தாலிபான் அமைப்புக்கு சில நாடுகளின் நிதி உதவி கிடைப்பதால் இது தொடர்ந்து ஆஃப்கன் அரசுடன் போர் புரிந்து வருகிறது. அதையே தங்களது கொள்கையாக கொண்ட இவர்கள் சமீபத்தில் கொரோனா தாக்கம் காரணமாக சற்று அடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் 2 லட்சத்து 50 ஆயிரம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்த நிலையில் தற்போது 700 பேர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.