வருமானம் இல்லை…. மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த நடிகர் சுரேஷ் கோபி..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். எனக்கு பதில் கேரளாவை சேர்ந்த சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் இணைக்க வேண்டும்” என்று மத்திய இணையமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. இவர் 2016ம் ஆண்டு அக்டோபரில் பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது கேரளாவில் இருக்கும் ஒரேயொரு நாடாளுமன்ற எம்பி சுரேஷ் கோபி தான்.

இதனால் சுரேஷ் கோபிக்கு பிரதமர் மோடி மத்திய அமைச்சர் பொறுப்பை வழங்கினார். சுற்றுலா – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் மத்திய இணையமைச்சராக சுரேஷ் கோபி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

இதுதொடர்பாக கேரள மாநிலம் கண்​ணூரில் நேற்று நடை​பெற்ற பாஜக விழா​வில் சதானந்​தன் மாஸ்​டர் பங்​கேற்​றார். இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய பெட்​ரோலிய துறை இணை அமைச்​சர் சுரேஷ் கோபி தொண்​டர்​களிடம் பேசி​ய​தாவது:

நான் ஒருபோதும் அமைச்​ச​ராக ஆசைப்​பட்​ட​தில்​லை. அமைச்​ச​ரான பிறகு எனது சினிமா வரு​மானம் கணிச​மான அளவில் குறைந்​துள்​ளது. எனவே நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும். எனவே நான் அமைச்​சர் பதவி​யில் இருந்து விலக விருப்​பம் தெரி​வித்​துள்​ளேன்.

அமைச்​சர் பதவி​யில் இருந்து என்னை நீக்​கிய பிறகு சதானந்​தன் மாஸ்டரை அமைச்​ச​ராக்க வேண்​டும் என்று நான் இங்கே மனதா​ரக் கூறுகிறேன். இது கேரள அரசி​யல் வரலாற்​றில் ஒரு புதிய அத்​தி​யாய​மாக மாறும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார்​.