லாரி கவிழ்ந்து விபத்து மூவர் காயம்….!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை கல்லூரி முத்து மேம்பாலத்தில் திருப்பரங்குன்றத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மதுரைக் கல்லூரி முத்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது.


இதில் ஓட்டுனர் உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர் இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், வெங்கடேசன் தலைமை குழுவினர் இடிபாடுகளில் சிக்கி உள்ள ஓட்டுனர் உட்பட 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பாலத்தின் பக்கவாட்டில் முற்றிலும் சேதமடைந்தது பத்து டன்னுக்கு அதிகமான பாரம் ஏற்றி செல்ல உகந்தது அல்ல என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் பாலத்தின் பக்கவாட்டில் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. விபத்து இதுகுறித்து மதுரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு துறை lll விசாரணை செய்து வருகின்றனர்.