பிரதமரின் அயோத்தி வருகை : உத்திரபிரதேச எல்லைகளில் பலத்த பாதுகாப்பு..!

Scroll Down To Discover
Spread the love

2019ல் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதித்து மூன்று மாதத்திற்குள் கோயில் கட்டுவதற்குரிய அறக்கட்டளையையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு ஏற்படுத்தியது. அயோத்தியில் ஆக., 5ம் தேதி பூமி பூஜை நடக்கிறது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிலையில், பிரதமரின் அயோத்தி வருகை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, நேபாளத்தை ஒட்டியுள்ள உ.பி., மாநில எல்லை பகுதிகளில் போலீஸ் மற்றும் சஷஸ்திர சீமா பல் படையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில போலீசார் கூறியதாவது: நேபாள எல்லையை ஒட்டியுள்ள மஹாராஜ்கஞ், சித்தார்த் நகர், ஷ்ரவஸ்தி, பஹரைச் ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சஷஸ்திர சீமா பல் படையின் சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்லை வழியாக வருவோரின் அடையாளங்களை நன்கு பரிசோதிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பெண்கள் பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோனாலி, டுடிபாரி சோதனை சாவடிகளில், மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு பரிசோதனை நடைபெறுகிறது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கபப்ட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.