கல்குவாரி பள்ளத்தில் வழுக்கி விழுந்து அண்ணன் தங்கை உயிரிழப்பு …!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிபட்டியில் வண்ணான் மலையடி கல்குவாரி பள்ளத்தில் குளிக்கச் சென்ற அண்ணன் தங்கை வழுக்கி விழுந்து பலியான சம்பவம் அரளிபட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரளிபட்டியை சேர்ந்தவர் பாண்டிமுருகன் இவர் மலேசியாவில் வேலை கூலி பார்த்துவருகிறார் இவரது மனைவி இந்திரா 100 நாள் வேலை திட்டம் மற்றும் கூலி வேலை பார்த்து இரண்டு பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார் இந்நிலையில் இந்திராவின் சகோதரிமகள் பாண்டி மீனா வண்ணான் மலையடி கல்குவாரி பள்ளத்தில் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது சின்னப்பாண்டி (13) சுபிக்ஷா (8) அண்ணன் தங்கை இருவரும் உடன் சென்றுள்ளனர் பாண்டி மீனாள் குளித்துவிட்டு உடைமாற்றும் நேரத்தில் இரண்டு குழந்தைகளும் நீரில் இறங்கிய போது தவறிவிழுந்த இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி தாமரை வேர் கொடியில் சிக்கி உயிரிழந்தனர் பிள்ளைகளை தேடிய பாண்டி மீனா வீட்டுக்கு சென்றிருப்பார் என நினைத்து வீட்டுக்கு சென்றபோது குழந்தைகள் காணவில்லை என்பதால் கிராமமே திரண்டு கல்குவாரி பணத்தில் தேடியபோது இரண்டு பிள்ளைகளும் பிணமாக மீட்கப்பட்டனர் SV மங்கலம் போலீசார் இரு உடலையும் கைப்பற்றி சிங்கம்புணரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்

தந்தை வெளிநாட்டில் வேலைபார்த்து கொண்டிருக்கும் நிலையில் தாய் கூலி வேலை பார்த்து பிள்ளைகளை காப்பாற்றி வந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் பலியான சம்பவம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது