சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85,859 பேராக அதிகரித்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 15,042 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிகிச்சை பெற்று 69,382பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் சென்னையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,434 பேராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில்,மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு அறிவித்த 1000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையை வழங்கிய பின், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் அறிவித்தபடி 38,000 சாலையோர வியாபாரிகளில் 14,600 வியாபாரிகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரைசென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 59,679 மாற்று திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை நிவாரணம் பெரும் மாற்றுத்திறனாளிகள் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சுய கட்டுப்பாடு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக குறைந்து வருவதாகவும் இதனை நழுவ விடக் கூடாது என்பதற்காக மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

														
														
														
Leave your comments here...