சீண்டும் நேபாளம்: எல்லையில் திடீர் துப்பாக்கி சூடு : இந்தியர் காயம்…!!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி, இந்து கடவுளான ராமர் அவதரித்த இடம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில், ராமர் பிறந்த அயோத்தி நகரம் இருப்பது நேபாள நாட்டின் எல்லையோர நகரமான பிர்கஞ்ச் அருகேயுள்ள தோரி கிராமத்தின் அருகே இருக்கிறது என்று நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இவரது இந்த அறிவிப்பு இந்தியாவில் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கிடையே, ராமரின் பிறப்பிடம் குறித்த உண்மைநிலை அறிவதற்காக தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள நேபாள அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
https://twitter.com/ANI/status/1284858650146729984?s=20
இதற்கிடையில், இந்திய-நேபாள எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் எல்லையோர மாவட்டமாக கிருஷ்ணகஞ் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரு நாட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேபாள போலீசார் இன்று அத்துமீறி கிருஷ்ணகஞ் மாவட்டத்தை சேர்ந்த சிலரை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.நேபாள போலீசாரின் இந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கிருஷ்ணகஞ் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு இருநாட்டு எல்லை விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக கடந்த மாதம் பீகார் அருகே இந்தியர் ஒருவர் நேபாளம் போலீஸ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.