கொரோனா பொது முடக்கத்தால் ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ளை வருவாய் இழப்பு – ஊழியர்கள் குறைப்பிற்கு இந்திய ரயில்வே வாரியம் பரிந்துரை

Scroll Down To Discover
Spread the love

இந்திய ரயில்வேதுறை அதிகமான தொழிலாளர்களை கொண்ட அரசு துறையாகும். லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் ரயில்சேவை முடங்கியது. தற்போது சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பொருளாதார ரீதியில் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்கவும், புது இடங்களை நிரப்புவதை நிறுத்தி வைக்கவும் பொது மேலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் ஆட்கள் குறைப்பு இருக்காது என உறுதி அளித்துள்ளது. அதேவேளையில் சுயவிவரம் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில்வே துறையில் பாதுகாப்பு அல்லாத பணியிடங்களில் தற்போதுள்ள காலியிடங்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தும் பணி கோட்டவாரியாக நடைபெற்று வருகிறது. இதற்கான துறைரீதியிலான சுற்றறிக்கை கோட்ட மேலாளர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அளிக்கும் பாதுகாப்பு இல்லாத காலிப் பணியிட பட்டியலில் 50 இடங்கள் குறைக்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கையால் தென்னக ரயில்வேயில் சுமார் 4 ,000 பணியிடங்கள் உட்பட, நாடு முழுவதும் 60,000 பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளது.கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை காரணம் காட்டி, ஆட்களைக் குறைப்பது கடும் பணிச்சுமை மற்றும் பயணிகள் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று (DREU) ரயில்வே ஊழியர்களின் துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.