கந்தசஷ்டி கவச விவகாரம் – அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் இதில் அமைதி காக்கும் காரணமென்ன..? அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி!

Scroll Down To Discover
Spread the love

கருப்பா் கூட்டம்’ என்ற பெயரில் செயல்படும் யூ டியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாகப் பேசி, அவமதிக்கும் வகையிலும் விடியோ வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா, வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் ஆா்.சி.பால்கனகராஜ் ஆகியோா் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 13-ஆம் தேதி புகாா் அளித்தனா்.

இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா், ‘கருப்பா் கூட்டம்’ யூ டியூப் சேனல் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த யூ டியூப் சேனலின் நிா்வாகிகளில் ஒருவராகக் கருதப்படும் சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசனை (49) புதன்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், பலரைத் தேடி வந்தனா். அந்த சேனல் நிா்வாகிகளில் ஒருவரான சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த ந.சுரேந்தா் (36) புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனது நண்பா்களைச் சந்திக்க வந்த போது, தன்னை போலீஸாா் தேடி வருவதையறிந்து, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா். இதுகுறித்து புதுச்சேரி போலீஸாா் சென்னை குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு வந்த சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், சுரேந்தரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து சுரேந்தர், சென்னை ராயபுரத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர்எஸ்.பி வேலுமணி கந்தசஷ்டி கவச விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு எழுப்பி கேள்வி உள்ளார் .

இது குறித்து எஸ்.பி வேலுமணி ட்விட்டரில்:
https://twitter.com/SPVelumanicbe/status/1284342985346310144?s=20
தேர்தல் வரும்போது மட்டும் தான் ஒருவருக்கு அனைத்து தரப்பு மக்களும், அவர்களது உணர்வுகளும் திடீர் நினைவிற்கு வரும் போலும்.கோவில் கோவிலாக படியேறும் அரசியல் நேர்த்திக்கடன் நாடகங்களும் அரங்கேறும்.அரசின் சார்பில், தமிழர் கடவுள் முருகரை அருவருப்பாக நிந்தித்தவர் மீது கைது உட்பட கடும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் @mkstalin, உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன!?

இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவரது கட்சியை சார்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகங்கள் எழுப்பப்படுவதாலா!? அல்லது மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பாலான ஒரு சாராருக்கு எதிராக மட்டும் அவரும், அவருடைய கட்சியும் செயல்படுவதாலா!? என எழுப்பி கேள்வி உள்ளார் .