சாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்ஐ., உள்ளிட்ட 5 போலீசார் கைது – சி.பி.சி.ஐ.டி

Scroll Down To Discover
Spread the love

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்திவந்த ஜெயராஜ் 60, அலைபேசி கடை நடத்திவந்த அவரது மகன் பென்னிக்ஸ் 31, ஊரடங்கு காலத்தில் நீண்டநேரம் கடையை திறந்திருந்ததாக, ஜூன் 19ல் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவில் விசாரணையின்போது கடுமையாக தாக்கினர். பின்னர் மறுநாள் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு அடுத்தடுத்து தந்தை, மகன் இறந்தனர்.

இந்த வழக்கு சிபிஐ.,க்கு மாற்றப்பட்டது.தொடர்ந்து எஸ்.ஐ.கள், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார், முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 6 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதில் எஸ்.ஐ., ரகு கணேஷ் நேற்று(ஜூலை1) கைது செய்யப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து தூத்துக்குடி கோர்ட் உத்தரவிட்டது. வரும் 16ம் தேதி அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.மற்றவர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை இன்று காலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்பி செல்ல முயன்றார். இதனையடுத்து கோவில்பட்டியில் அவரை பிடித்த சிபிசிஐடி அதிகாரிகள், அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.