பைக் திருட்டில் ஈடுபட்ட பாதிரியார் : 11 பைக்குகள் பறிமுதல் – அலேக்காக தூக்கிய போலீஸ்!

Scroll Down To Discover
Spread the love

மதுரையில் பைக் திருட்டில் ஈடுபட்ட பாதிரியாரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 11 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அருகேயுள்ள பர்மாகாலனி பகுதியை சேர்ந்த விஜயன் (எ) சாமுவேல். இவர் அதே பகுதியில் கிறிஸ்துவ புல்டர்ஸ் அசெம்ப்ளி என்ற அமைப்பை நடத்தி போதனைகளில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக போதிய வருமானம் இல்லாத நிலையில் வெளியில் சுற்றி திரிந்த பாதிரியார் வீடுகளில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திருடிய பைக் ஒன்றை மெக்கானிக் கடையில் கொடுத்தபோது பைக் விபரங்கள் குறித்து முரண்பாடாக பதில் அளித்த நிலையில் மெக்கானிக் தரப்பில் இருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ததில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதை ஒப்புகொண்டுள்ளார்.

இந்நிலையில் தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து 11பைக்குகளை சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கொரோனா ஊரடங்கால் பாதிரியார் பைக் திருடராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.