தமிழகத்தில் முதலீடுசெய்ய நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைளை முதல்வர் பழனிசாமிமேற்கொண்டு வருகிறார். வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தல், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
https://twitter.com/CMOTamilNadu/status/1271466985465864192?s=20
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏனஜி மேட்டல் இங் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை அலுவலர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான சூழ்நிலைகளை பட்டியலிட்டு தனித்தனியே கடிதம் எழுதி உள்ளார்
தமிழகம்
June 13, 2020

Leave your comments here...