தேவகவுடா உள்ளிட்ட 4 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு!

Scroll Down To Discover
Spread the love

ராஜ்ய சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகாவில் ராஜ்யசாப தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அங்கு கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது.பாஜக கட்சி இந்த தேர்தலில் புதிய வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. அங்கு மொத்தம் 4 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள குபேந்திர ரெட்டி(ஜே.டி.எஸ்.,), ஹரிபிரசாத்(ஜே.டி.எஸ்.,), ராஜூவ் கவுடா(காங்.,), பிரபாகர்(பா.ஜ.,) ஆகியோரின் பதவி காலம் வரும் ஜூன் 25ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கவுடா கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜக அசோக் காஸ்தி, ரானா கடாடி ஆகிய இரண்டு புதிய எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறது. கர்நாடகாவில் மாநிலங்களவை உறுப்பினர்களாக நான்கு வேட்பாளர்கள் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.