புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் நிதியுதவி வழங்கிய ஆளுநர்

Scroll Down To Discover
Spread the love

சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

தன் விருப்ப நிதியிலிருந்து, இத்தொகையை ஒதுக்கியுள்ளார்.அதன்படி, ஏப்., 1ல், 11 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நேற்று, இரண்டாம் தவணையாக, 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, உதவி செய்வதற்காக, இந்த நிதி செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.